Skip to main content

பல வேரியண்ட்கள் கொண்ட பொருளை அமைத்தல்

இந்த வழிகாட்டி, மெர்சண்ட் செயலியில் ஒரு பொருளுக்கு பல வேரியண்ட் குழுக்களை அமைப்பது எப்படி என்பதை விளக்குகிறது. பல வேரியண்ட்கள் இருந்தாலும், ஒரே ஒரு வேரியண்ட் குழுவிற்கு மட்டும் விலை நிர்ணயம் செய்ய முடியும்; இதுவே முதன்மை விலை கொண்ட வேரியண்ட் குழு ஆகும். மற்ற அனைத்து வேரியண்ட் குழுக்களும் ₹0 விலையில் இயங்கும். பில்லிங் முடிக்க, ஒவ்வொரு வேரியண்ட் குழுவிலிருந்தும் குறைந்தது ஒரு தேர்வு அவசியம்.


எடுத்துக்காட்டு

  • பொருள்: பன்னீர் பர்கர்
  • அளவு: முதன்மை விலை கொண்ட வேரியண்ட் குழு
  • பன்னீர் வகை, சாஸ்: தனிப்பயன் தேர்வுகள் (₹0)

தொடங்குவதற்கு முன்

  • மெர்சண்ட் செயலியில் உள்நுழைந்திருக்க வேண்டும்
  • இன்வென்டரி பகுதிக்கு Edit access இருக்க வேண்டும்

படி 1: பொருளை உருவாக்குதல் அல்லது திருத்துதல்

  1. Inventory → Products பகுதிக்கு செல்லவும்
  2. புதிய பொருளை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள பொருளைத் திறக்கவும்
  3. பெயர், கேடகரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிடவும்
note

வேரியண்ட் அடிப்படையிலான பொருளுக்கு, முதன்மை விலை புலத்தில் விலை நிர்ணயம் செய்ய முடியாது. விலை அனைத்தும் முதன்மை விலை கொண்ட வேரியண்ட் குழுவில் மட்டுமே அமைக்க வேண்டும்.

Inventory products list


படி 2: வேரியண்ட் குழுக்களை உருவாக்குதல்

  1. பொருள் திரையில் Variants பகுதிக்கு செல்லவும்
  2. Add Variant தேர்வு செய்து வேரியண்ட் குழுக்களை உருவாக்கவும்

Add variant products

பரிந்துரை: எந்த வேரியண்ட் குழு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கவும் (எ.கா: அளவு).


படி 3: முதன்மை விலை கொண்ட வேரியண்ட் குழு (அளவு)

  1. அளவு என்ற வேரியண்ட் குழுவை உருவாக்கவும்
  2. பெயர் மற்றும் Sort Order உள்ளிட்டு குழுவை சேமிக்கவும்
  3. வேரியண்ட் சேர்க்கும்போது, முதன்மை விலை கொண்ட வேரியண்ட் விருப்பத்தை ON செய்யவும்
  4. வேரியண்ட் பெயர், உணவு வகை, விலை, பார்சல் கட்டணம் (விருப்பம்) ஆகியவற்றை உள்ளிடவும்

Add variant group

எடுத்துக்காட்டு:

வேரியண்ட்விலை
மீடியம்₹150
லார்ஜ்₹180

Priced variant group list

note

முதன்மை விலை கொண்ட வேரியண்ட் குழுவில் விலை புலம் கட்டாயமாக இருக்கும்.


படி 4: ₹0 விலை கொண்ட வேரியண்ட் குழுக்கள்

பன்னீர் வகை

  • Paneer Type என்ற பெயரில் ஒரு Variant Group உருவாக்கவும்.
  • இந்த Variant Group தேர்வு செய்யப்பட்டால், இது முக்கிய விலை (Primary priced) குழு அல்லாததால் Price புலம் செயலிழந்த நிலையில் இருக்கும்.
  • Variants சேர்க்கவும் எடுத்துக்காட்டு: கிரில்ட் பன்னீர், கிரிஸ்பி பன்னீர்

Zero priced variant

சாஸ்

  • சாஸ் என்ற வேரியண்ட் குழுவை உருவாக்கவும்
  • எடுத்துக்காட்டு: மேயோ, மின்ட் மேயோ

Added variants


படி 5: பொருளை சேமித்தல்

  1. விலை உள்ள குழு ஒன்றே இருப்பதை உறுதி செய்யவும்
  2. மற்ற அனைத்து வேரியண்ட் குழுக்களும் ₹0 மற்றும் Single-select ஆக இருப்பதை சரிபார்க்கவும்
  3. Save / Update Item தேர்வு செய்யவும்

பில்லிங் நேரத்தில் கணக்கீடு

  • இறுதி விலை, முதன்மை விலை கொண்ட வேரியண்ட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்
  • ₹0 வேரியண்ட்கள் தனிப்பயன் தேர்வுகளாக மட்டும் செயல்படும்
  • ஒவ்வொரு வேரியண்ட் குழுவிலிருந்தும் ஒரு தேர்வு அவசியம்

பில்லிங் எடுத்துக்காட்டு

Sync செய்த பிறகு, பொருள் ஸ்டாஃப் செயலி பில்லிங் திரையில் காணப்படும்.

variant group select in Staff App

தேர்வுகள்:

  • அளவு: ரெகுலர் — ₹120
  • பன்னீர் வகை: கிரில்ட் பன்னீர்
  • சாஸ்: மேயோ

இறுதி விலை: ₹120