பர்ச்சேஸ் ஆர்டர் உருவாக்குவது
இந்த வழிகாட்டி Merchant App-ல் பர்ச்சேஸ் ஆர்டர் உருவாக்குவது எப்படி என்பதை விளக்குகிறது.
தொடங்குவதற்கு முன்
- Merchant App-ல் Purchases பகுதியில் Edit அனுமதி உங்களுக்கு இருக்க வேண்டும்.
- விற்பனையாளர் மற்றும் பொருட்கள் / மூலப்பொருட்கள் முன்பே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
(காண்க: விற்பனையாளர் உருவாக்கு)
படி 1: பர்ச்சேஸ் ஆர்டர் திறக்கவும்
-
மெயின் டாஷ்போர்டில் இருந்து Purchases → Orders என்பதைத் திறக்கவும்.

-
Add பொத்தானை அழுத்தி புதிய பர்ச்சேஸ் ஆர்டர் திரையைத் திறக்கவும்.
படி 2: விற்பனையாளர் மற்றும் ஆர்டர் விவரங்கள் தேர்வு
- Select Vendor பகுதியில் இருந்து விற்பனையாளரைத் தேர்வு செய்யவும்.
- Order status தேர்வு செய்யவும் – Open, Transit, அல்லது Received.
- Order date தேவையெனில் மாற்றவும் (இயல்பாக இன்றைய தேதி இருக்கும்).
படி 3: கட்டண விவரங்கள் அமைத்தல்
1. Payment Type (கட்டண வகை)
- Full payment – முழுத் தொகையும் இப்போது செலுத்தப்படும்.
- Credit – இப்போது கட்டணம் இல்லை, பின்னர் செலுத்தலாம்.
- Partially paid – ஒரு பகுதி மட்டும் இப்போது செலுத்தப்படும்.
2. Payment Mode (கட்டண முறை)
Full payment அல்லது Partially paid தேர்வு செய்தால்:
- Cash
- UPI
- Card
- Cheque
- Others
தேவையானால் Paid amount உள்ளிடவும்.

படி 4: கூடுதல் குறிப்புகள் (விருப்பம்)
-
Additional instructions பகுதியில் விற்பனையாளருக்கான குறிப்புகளை எழுதலாம்.
(உதா: “மாலை 6 மணிக்குள் டெலிவரி செய்யவும்”) -
WhatsApp மூலம் அனுப்ப வேண்டுமெனில் Send via WhatsApp தேர்வு செய்யவும்.

படி 5: பொருட்கள் சேர்த்தல்
5.1 ஏற்கனவே உள்ள பொருட்கள் / மூலப்பொருட்கள் சேர்க்க
-
பட்டியலில் இருந்து பொருட்களைத் தேடி தேர்வு செய்யவும்.
-
ஒவ்வொரு பொருளுக்கும்:
- Quantity
- Purchase price உள்ளிடவும்.
குறிப்பு: மூலப்பொருட்களுக்கு தேவையெனில் Counter name தேர்வு செய்யலாம்.

- GST % மற்றும் Inclusive / Exclusive தேர்வு செய்யவும்.
- Status Open அல்லாத நிலையில் இருந்தால் Auto Add தேர்வு செய்து Stock தானாக சேர்க்கலாம்.
- பின்னர் Save அழுத்தவும்.

5.2 புதிய (Non-inventory) பொருள் சேர்க்க (விருப்பம்)
தேவையான பொருள் பட்டியலில் இல்லையெனில்:
-
Non-inventory என்பதைத் தேர்வு செய்யவும்.
-
கீழ்கண்ட விவரங்களை உள்ளிடவும்:
- Item name
- Quantity
- Total price
-
தேவையானால் GST மற்றும் GST வகை (Inclusive / Exclusive) தேர்வு செய்யலாம்.
-
Save Changes அழுத்தவும்.
குறிப்பு: இந்த பொருள் இந்த ஆர்டருக்கே மட்டும் சேர்க்கப்படும்.

படி 6: டெலிவரி கட்டணம் மற்றும் தள்ளுபடி
Delivery Charges
- Delivery charges பகுதியில் தொகையை உள்ளிடவும்.
Discount
- Discount பகுதியில் தள்ளுபடி தொகையை உள்ளிடவும்.
குறிப்பு: டெலிவரி கட்டணம் மற்றும் தள்ளுபடி முழு ஆர்டருக்கும் பொருந்தும்.

படி 7: சேமிக்கவும்
- அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
- Submit அழுத்தவும்.
இப்போது பர்ச்சேஸ் ஆர்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதை பின்னர் பார்க்கலாம், திருத்தலாம் அல்லது விற்பனையாளருக்கு அனுப்பலாம்.