Skip to main content

ப்ளூடூத் பிரிண்டர் இணைப்பது

இந்த வழிகாட்டி, தெர்மல் பிரிண்டரை ப்ளூடூத் மூலம் ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைத்து PositEasy Staff App-ல் அமைப்பது எப்படி என்பதை விளக்குகிறது.

படி 1: ஹார்ட்வேர் அமைப்பு

  1. தெர்மல் பிரிண்டரை ON செய்யவும்
  2. பேப்பர் ரோல் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்
tip

டெஸ்ட் பிரிண்ட் எடுப்பது

  • பிரிண்டரை OFF செய்யவும்
  • Feed பொத்தானை அழுத்தியபடி ON செய்யவும்
  • லைட் ப்ளிங்க் ஆனதும் Feed பொத்தானை விடவும்
  • டெஸ்ட் பேஜ் தானாக பிரிண்ட் ஆகும்

சில 3-இஞ்ச் பிரிண்டர்களில் Feed பொத்தானை இரண்டு முறை அழுத்தினாலும் டெஸ்ட் பிரிண்ட் வரும்.

2inch-printer 3inch-printer

படி 2: ஆண்ட்ராய்டு சாதனத்தில் Bluetooth Pair செய்வது

  1. Settings → Bluetooth சென்று Bluetooth-ஐ ON செய்யவும்
    அல்லது
    திரையின் மேலிருந்து கீழே ஸ்வைப் செய்து, Bluetooth-ஐ கண்டுபிடித்து ஆன் செய்யவும். Bluetooth ஐகானை long press செய்து, Bluetooth அமைப்புகளை திறக்கவும்.
  2. கிடைக்கும் டிவைஸ் பட்டியலில் பிரிண்டர் பெயரைத் தேர்வு செய்யவும்
Android bluetooth pairing
  1. Pair code கேட்டால் 0000 அல்லது 1234 உள்ளிடவும்
  2. Connected / Paired என காட்டினால் Pairing வெற்றிகரமாக முடிந்தது

படி 3: Staff App-ல் பிரிண்டர் அமைத்தல்

  1. PositEasy Staff App திறக்கவும்
  2. Printer Settings செல்லவும்
  3. Save & Print → ON செய்யவும்
  4. Connection Type → Bluetooth தேர்வு செய்யவும்
  5. Refresh Printers கிளிக் செய்யவும்
  6. Pair செய்யப்பட்ட பிரிண்டரைத் தேர்வு செய்யவும்
  7. Print Size தேர்வு செய்யவும்:
    • 2-inch (58 mm)
    • 3-inch (72 / 80 mm)
Printer Config Staff App

படி 4: Test Print சரிபார்த்தல்

  1. Test Print பொத்தானை தட்டவும்
  2. டெஸ்ட் ரசீது சரியாக வந்தால், பிரிண்டர் இணைப்பு வெற்றிகரமாக முடிந்தது

இதற்குப் பிறகு, PositEasy Staff App மூலம் பில்லிங், KOT மற்றும் ரசீதுகளை ப்ளூடூத் தெர்மல் பிரிண்டர் வழியாக சீராக பிரிண்ட் செய்யலாம்.